Perambalur: Broadband Technician training for S.C., S.T., categories: Collector information!
தாட்கோ மூலமாக, பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட் பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. தொழில் நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட் பேண்ட் டெக்னிஷியன் பயிற்சியில் சேர்ந்து பயில 12-ம் வகுப்பு தேர்ச்சி, தொழிற்பயிற்சி (ITI), பட்டயம் படிப்பு (Diploma) மற்றும் ஏதேனும் பட்டப் படிப்பில் தேர்ச்சியும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். இப்பயிற்சி முடித்த உடன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சிக்கு, ww.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இவ்வாறு தெரிவித்துள்ளார்.