Perambalur: Bus collides with truck in front; 8 people injured!
சென்னையில் நடந்த ஜாக்டோ – ஜியோ மாநாட்டிற்கு சென்று விட்டு, சொந்த ஊரான டி.கல்லுப்பட்டிக்கு தனியார் பஸ்சில் சென்றுக் கொண்டிருந்தனர். பஸ்சை மதுரை மாவட்டம், கொட்டாணிபட்டியை சேர்ந்த மாதவன் (34) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் இன்று காலை 05.45 மணியளவில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருந்த போது, பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு, அருகே முன்னால் சென்று கொண்டிருந்த சிமெண்ட் லாரி மீது, தூக்க கலக்கத்தில், மோதினார். இதில் பஸ் தடம்புரண்டு, சாலை தடுப்பில் ஏறி சென்று நின்றது.
இதில் 3 பெண்கள் 8 பேர் காயமடைந்தனர். மங்களமேடு போலீசார். ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பஸ் ஓட்டுனர் போதிய ஓய்வு இல்லாமலும் பஸ்சை தொடர்ந்து ஓட்டி வந்தது தெரிய வந்தது.
வாகனங்களில், நெடுந்தொலைவு பயணிப்போர், டிரைவர்களுக்கு உரிய ஓய்வு மற்றும் தூக்கம் கொடுத்தாலே, பெரும்பாலான விபத்துகளை தவிர்க்க முடியும்.