Perambalur bus collision on the two wheller: retired government bus conductor injured

road_accident பெரம்பலூர் அருகே தீரன் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ்(58), இவர் பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக டெப்போவில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்ற செல்வராஜ் டூவீலரில் தீரன் நகர் நோக்கி சிட்டி யூனியன் வங்கி எதிரே வந்து கொண்டிருந்தார். அப்போது மலையாளப்பட்டி கிராமத்திலிருந்து பெரம்பலூர் வழியாக திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த அரசுப்பேருந்து செல்வராஜ் மீது மோதியது.

இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த செல்வராஜ் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்த செல்வராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய அரசுப்பேருந்து ஓட்டுநர் ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர். இதனிடையே காயமடைந்த செல்வராஜும் விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் ரவிச்சந்திரனும் உறவினர்கள் என்பதால் முன் விரோதம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!