Perambalur: Car, bike seized in cases to be auctioned publicly; District Police Department announces!

பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா குற்ற வழக்குகளில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்ட13 பைக்குகள், 1 மூன்று சக்கர வாகனம், மற்றும் 4 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 16 வாகனங்கள் அரசுடமையாக்கப்பட்டும் அவற்றிக்கு விலை மதிப்பீடு பெறப்பட்டுள்ளது. வரும் 12.12.2025 ஆம் தேதி காலை 11.00 மணிக்கு போதைப்பொருள் ஒழிப்பு குழு உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி தலைமையில் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாகனங்களை பொது ஏலத்தில் பெற்றுக்கொள்ளும் நபர்கள் அந்த வாகனங்களின் ஏலம் எடுத்த தொகையின் மதிப்புடன் கூடுதலாக இரு சக்கர வாகனங்களுக்கு 12% வரியும் மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18% வரியுடன் உரிய மொத்த தொகையினை ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் எடுத்த உடனே மொத்த தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம். வாகனங்களை பொது ஏலத்தில் எடுக்க உத்தேசிக்க உள்ளவர்கள் 10.12.25 முதல் 11.12.25 ஆம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் பொம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்களது ஆதார்கார்டு நகலுடன் ரூ.500/- முன்பணமாக செலுத்தி டோக்கன் பெற்றுக்கொண்டு அதன்பின்னர் 12.12.25 ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு மேல் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என்றும் டோக்கன் பெற்றுக்கொள்ளாத நபர்கள் பொது ஏலத்தில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்க இயலாது என்பதையும் தெரிவிக்கப்படுகிறது.
AP 10 BF 9191 Nisson Sunny என்ற நான்கு சக்கர வாகனம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்திலும் TN 06 C 0033 Honda City என்ற நான்கு சக்கர வாகனம் மங்களமேடு காவல் நிலையத்திலும் மீதமுள்ள வாகனங்கள் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள்ளது. மேற்படி வாகனங்களை பார்வையிட விரும்பும் நபர்கள் 10.12.25 முதல் 11.12.25 ஆம் தேதி வரை பார்வையிடலாம். தொடர்புக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகம் 7904136038, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர், 9498162279, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் 9787658100 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறையினர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497