Perambalur: Car overturns in an accident after a cow crossed the road; one dead, four injured!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே மாடு குறுக்கே வந்ததால், கார் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் பெண் ஒருவர் பலியானார். மேலும், 4 பேர் படுகாயமடைந்து அரியலூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை ரவுண்டானா அருகே உள்ள ரெங்காநகர் பகுதியை சேர்ந்தவர் பரசிவம் மகன் பாரதி (35), இன்று அவருக்கு சொந்தமான காரில் அவரது மனைவி கார்த்திகா (28), மகன் தருண் (11), காவியா (8), இவரது நண்பரான சந்தீப் மகன் மகேந்திரன் (16) ஆகியோர் ஒரு காரில் பெரம்பலூர் வந்து படம் பார்த்து விட்டு மாலை செந்துறைக்கு திரும்பி சென்றுக் கொண்டிருந்தனர். காரை, பாரதி ஓட்டினார். கார் பெரம்பலூர் – அரியலூர் சாலையில் குன்னம் அண்ணா நகர் பகுதியில் உள்ள எடை மேடை அருகே சென்றுக் கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக தீடீரென மாடு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறிய கார் சாலையின் இடது புறம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில், காரில் வந்த கார்திகா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரழந்தார். மேலும், காரில் வந்த பாரதி, அவரது குழந்தைகள் தருண், காவியா, நண்பரின் பையன் மகேந்திரன் ஆகியோர் படுகாயமடைந்து அலறிக் கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497