Perambalur: Chief Minister M. K. Stalin laid the foundation stone in a video conference to build 20 classrooms and laboratories at a cost of Rs. 5.27 crore!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் 263 புதிய கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், உள்ளிட்ட கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.122 கோடியில் கட்டப்பட்டுள்ள 76 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.

இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 103.16 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைக் கட்டட பணிகளுக்கும், அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 123.30 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைக் கட்டடம் மற்றும் 2 கழிவறை கட்டடங்களுக்கும், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 78.42 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைக் கட்டடம் மற்றும் குடிநீர் வசதிகளும், சத்திரமனை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 148.29 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் 1 ஆய்வகக் கட்டடங்களுக்கும், பசும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 73.82 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் 2 கழிவறை கட்டடங்கள் என மொத்தம் ரூபாய் 526.99 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

அதனைத்தொடர்ந்து, கலெக்டர் ந.மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் கட்டப்படவுள்ள இடத்தைப் பார்வையிட்டு பணிகளை தொடங்கி வைத்தனர். பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் ஒன்றிய திமுக செயலாளர் ராஜ்குமார், ஒப்பந்தாரர் என்ஜினியர் சிவா உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!