Perambalur: Chief Minister MK Stalin inaugurated the Mettupalayam and Venmani sub-power stations via video conferencing this morning!

Mettupalayam_Power_Sub_Station

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் ரூ.6 கோடியே 88 லட்சத்து 47 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 33/11 KV துணை மின் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். அப்போது போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இத்துணை மின் நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம், பிரம்மதேசம், வாலிகண்டபுரம், சாத்தனவாடி, வி.களத்தூர், வி.ஆர்.எஸ்.எஸ்.புரம், வல்லாபுரம், அனுக்கூர், அ.குடிக்காடு கிராமங்களை சேர்ந்த சுமார் 10,000 -மின் நுகர்வோர்கள் சீரான மின்சாரத்தால் பயன் பெறுவார்கள்.

அட்மா சேர்மன் மாவட்ட திமுக பொறுப்பாளருமான வீ.ஜெகதீசன், திமுக பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் என். ராஜேந்திரன், மேற்பார்வை பொறியாளர் வி‌. மேகலா, செயற்பொறியாளர் ஆர் அசோக்குமார், உதவி செயற்பொறியாளர் வில்வனேஸ்வரன், உதவி மின் பொறியாளர் ஏ அழகர், உதவி செயற்பொறியாளர் முத்தமிழ் செல்வன், லப்பைக்குடிக்காடு உபகோட்ட உதவி மின் பொறியாளர்கள் அருண்குமார், கொளஞ்சிநாதன், சுரேந்திரன், வேல்முருகன் உள்பட மின் வாரிய பணியாளர்கள், முன்னாள் மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

வெண்மணி துணை மின் நிலையத்தையும் கானொளியில் முதலமைச்சர் திறந்து வைத்தார். இதன் மூலம் குன்னம், கல்லம்புதூர், அந்தூர், வரகூர், பெரியவெண்மணி, நல்லறிக்கை, புதுக்குடிசை, மேலமாத்தூர், கீழமாத்தூர், கொத்தவாசல் ஆகிய கிராமங்களைச் சார்ந்த சுமார் 4,530 மின் நுகர்வோர்கள் சீரான மின்சாரம்பெற்று பயன் பெறுவார்கள்.

ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 5 புதிய கூடுதல் வகுப்பறைகளையும், கொட்டரை அரசு உயர் நிலைப்பள்ளியில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 புதிய கூடுதல் வகுப்பறை கட்டடங்களையும் திறந்து வைத்தார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!