Perambalur: Collector distributed government welfare assistance worth Rs. 9.24 crore!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னத திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு 213 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கிடும் வகையில், முதற்கட்டமாக 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை வழங்கியும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகளையும், 100 தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதார அட்டைகளையும், 30 நரிக்குறவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதியில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை வழங்கியும் சிறப்புரையாற்றினார்.

இதனை, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் அமர்ந்து நேரலையில் பார்வையிட்டு, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றும் அனைத்துத் துறைகளைச் சார்ந்த 1,771 பயனாளிகளுக்கு ரூ.9.24 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.4.82 லட்சம் மதிப்பீட்டில் தீருதவித் தொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகளும், தாட்கோ மூலம் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் நிலம் வாங்குதல், தொழிற்கடன், மானிய விலையில் கறவைமாடு வாங்குவதற்கான கடனுதவி 13 பயனாளிகளுக்கு ரூ.25.76 லட்சம் மதிப்பீட்டில், கடன் உதவிகளையும்,

 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 418 பயனாளிகளுக்கு ரூ.4.08 கோடி மதிப்பீட்டில் இ-பட்டா மற்றும் பல்வேறு சான்றிதழ்களையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் அமுத சுரப்பி கடன், இயற்கை வேளாண் பண்ணை தொகுப்பு கடன், ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பு கடன் என 314 பயனாளிகளுக்கு ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகளையும்,

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை (பொது விநியோகம்) சார்பில் 112 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், தமிழ்நாடு தொழில் வணிகத்துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டம், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்குதல் திட்டங்களின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகளையும், வேளாண்மை துறையின் சார்பில் 46 பயனாளிகளுக்கு ரூ.14.52 லட்சம் மதிப்பீட்டில் மானாவாரி நிலமேம்பாட்டு திட்டம் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்கான ஆணைகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், மிளகு பரப்பு விரிவாக்கம், வெங்காய சேமிப்பு அமைப்பு, மற்றும் இதர திட்டங்களின் கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.11.13 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிக்கான ஆணைகளையும்,

வேளாண் மற்றும் பொறியியல் துறை சார்பில் உழுவை இயந்திரம், பவர் வீடர், விசை களை எடுக்கும் கருவி 5 பயனாளிகளுக்கு ரூ.14.94 லட்சம் மதிப்பீட்டில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் 785 பயனாளிகளுக்கு ரூ.38.55 லட்சம் மதிப்பீட்டில் மகப்பேறு உதவித்தொகையினையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் உதவி தொகையும் என மொத்தம் 1,771 பயனாளிகளுக்கு 9.24 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.

மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன், திமுக மாவட்ட செயலாளர் ஜெகதீசன், திமுக பொதுக்குழு உறுப்பினர் என். ராஜேந்திரன், பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாத்துரை, நகராட்சி கமிசனர் ராமர், பெரம்பலூர் நகராட்சித் துணைத் தலைவர் ஆதவன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!