Perambalur: Collector inaugurates the work of planting one lakh palm seeds!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள தெரணி கிராமத்தில், ஊரக வளரச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் இணைந்து நடத்திய பனை மரக்காடு திட்டத்தின் மூலம் 1 லட்சம் பனை விதைகள் நடும் பணியை கலெக்டர் ந.மிருணாளினி தொடங்கிவைத்தார்.

இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும், பொதுமக்களும் ஏராளமாக கலந்துகொண்டு பனை விதைகளை நட்டனர். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் நட்டு வைக்கப்படும் அனைத்து விதைகளையும் முறையாக தண்ணீர் ஊற்றி நல்ல முறையில் பராமரித்து, வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!