Perambalur: Collector invites applications from differently-abled people to set up Aavin product sales centers!
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க ஒரு நபருக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கி வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 18 வயது முதல் 45 வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க நிதி உதவி பெறாதவராக இருக்க வேண்டும்.
எனவே, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி மாற்றுச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் 27.01.2025 தேதிக்குள் நேரில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.