Perambalur Collector MLA launches extra Trip bus at Nakkaselam

கடந்த ஏப்.25ம் தேதியன்று,
பெரம்பலூர் மாவட்டம், ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி. கூலித்தொழிலாளி இவரது மகள் விஜயலட்சுமி (16), நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று, வழக்கம் போல் அன்றும் பள்ளிக்கு செல்ல, பாடாலூர் – துறையூர் செல்லும் நகர பேருந்தில் முன்பகுதியில் ஏறி சென்றார். அளவிற்கு அதிமாக கூட்டம் இருந்ததால், நக்கசேலம் அருகே பஸ் வரும் போது, தவறுதலாக கீழே விழுந்ததில் மாணவி விஜயலட்சுமிக்கு வலது கை மற்றும் கால் முறிவு ஏற்பட்டது.

இதற்கு முன்பாக பல முறை அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் கூடுதல் பேருந்துகளை இயக்க மனு கொடுத்து இருந்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மாணவி விழுந்து கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டவுடன் அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தால், அதிகாரிகள் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு எடுத்தனர். இதன் விளைவாக,

இன்று

நக்கசேலம் ஊராட்சியில், பெரம்பலூர் முதல் செட்டிகுளம், சிறுவயலூர், புது விராலிப்பட்டி, பழைய விராலிப்பட்டி, ஈச்சம்பட்டி, புது அம்மாபாளையம் வழியாக நக்கசேலம் வரை செல்லும் வகையில் கூடுதல் நடை நகர பேருந்து வசதியினை கலெக்டர் வெங்கடபிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திரு சி.ராஜேந்திரன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை கோட்ட மேலாளர் ஆர்.ராமநாதன், கிளை மேலாளர் ராஜா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மதியழகன், நக்கசேலம் ஊராட்சி மன்றத்தலைவர் மைதிலிகணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உரிய காலத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதற்கு இந்நிகழ்ச்சியும் ஒரு சான்று. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பளம் மட்டும் பெறுவதை நோக்கமாக கொண்டிருக்காமல் சமுதாய வளர்ச்சியிலும், அக்கறை செலுத்தி வரி செலுத்தும் எஜமானர்களுக்கு விசுவாசியாக இருக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!