Perambalur Collector Visits Newly Constructed Ponds in Amrit Sarovar Project!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூத்தனூர் வெள்ளி மலை அருகிலும், மருதடி ஈச்சங்காடு அருகிலும் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் புதியதாக உருவாக்கப்பட்டு வரும் குளங்களின் பணிகளின் நிலை குறித்து கலெக்டர் வெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் இதர திட்டங்கள் மூலமாக பணி மேற்கொள்ளப்படாத நீர் ஆதாரங்களை மத்திய அரசின் புதிய திட்டமான அம்ரித் சரோவர் (Amrit Sarovar) என்ற திட்டத்தின் கீழ் புதிய குளங்கள் உருவாக்குதல் மற்றும் புனரமைத்தல் போன்ற செயல்பாடுகளின் மூலம் புதிதாக அமைக்கப்படும் குளத்தில் மழை நீரானது தேக்கி வைக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயரவும் சுற்றுப் பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாய பணிகள் மேம்படுத்தப்படவும் குடிநீர் பற்றாக்குறை தவிர்க்கவும் வழிவகுக்கும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் புதிய குளங்கள் வெட்டும் பணி மற்றும் புனரமைத்தல் பணிகளுக்காக இந்த நிதியாண்டில் 32 குளங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டார்மங்கலம் ஊராட்சியில் கூத்தனூர் வெள்ளிமலை அருகில் ரூ.5,80,000 மதிப்பீட்டிலும், நாரணமங்கலம் ஊராட்சியில் மருதடி ஈச்சங்காடு அருகில் ரூ.5,80,000 மதிப்பீட்டிலும், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செங்குணம் ஊராட்சியில் ரூ.5,80,000 மதிப்பீட்டிலும், எசனை ஊராட்சியில் பூந்தொப்புக்குளம் அருகில் ரூ.5,80,000 மதிப்பீட்டிலும்,

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பசும்பலூர் ஊராட்சியில் ரெட்டிச்சி குளம் அருகில் ரூ.5,80,000 மதிப்பீட்டிலும், தொண்டமாந்துரை ஊராட்சியில் விஜயபுரம் கிராமத்தில் ரூ.5,58,000 மதிப்பீட்டிலும் என ரூ.34,58,000 மதிப்பீட்டில் 6 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரவாய் ஊராட்சியில் உள்ள சிலம்பூரான் குட்டை ரூ.30,000 மதிப்பீட்டிலும், பரவாய் ஊராட்சியில் புள்ளக்குட்டை ரூ.30,000 மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 6 குளங்கள் என 24 குளங்கள் தோண்ட ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது அரசு பணியாளர்கள், நாரணமங்கலம் ஊராட்சித் தலைவர் ச.பத்மாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!