Perambalur: Community baby shower; Minister conducts and congratulates!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குன்னம் மற்றும் வேப்பூர் பகுதிகளை சேர்ந்த 150 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் ந.மிருணாளினி ஆகியோர் தலைமையில் சமுதாய வளைகாப்பு விழாவை நடத்தி வைத்து வாழ்த்தினர்.
கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களும், அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி, முன்னாள் யூனியன் சேர்மன் அழகு. நீலமேகம், திமுக பொதுக்குழு உறுப்பினர் PSR @ பட்டுச்செல்வி ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் டாக்டர் கருணாநிதி, குழந்தை வளர்ச்சித் திட்ட வட்டார அலுவலர்கள் பூமா, பிரேமா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497