Perambalur: Corruption in the cooperative society over mixing water with milk; Producers blockade the Collector’s office with cans!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் கடந்த 50 ஆண்டுகளாக சிறுவாச்சூர் 1310 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் இயங்கி வருகிறது. சுமார் 300க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்கள் இருந்த நிலையில் தற்போது 150 உறுப்பினர்களிடம் இருந்து உற்பத்தி செய்த பாலை கொள்முதல் செய்து வருகிறது.

அந்த பால் உற்பத்தியாளர் சங்கத்தில் நிரந்தர பணியாளர்களாக சங்கர நாராயணன் சங்க செயலாளராகவும், முத்துசாமி என்பவர் கனிணி ஆப்ரேட்டராகவும், ரெங்கநாதன் என்பவர் பால் விற்பனையாளராகவும், மூர்த்தி என்பவர் உதவியாளர் என மூவரும் வேலை செய்து வந்தனர். அவர்கள் மூன்று நபரும் கறவை மாடுகள் வைத்து சங்கத்திற்கு பால் ஊற்றும் வேலையையும் செய்து வந்தனர். ஆனால், அவர்கள் மூவரும் சுமார் 3ஆண்டுகளாக பாலில் தண்ணீர் ஊற்றி கலப்படம் செய்து வந்ததை சங்க உறுப்பினர்கள் எச்சரித்தும் பாவில் தண்ணீர் கலப்படம் செய்வதை நிறுத்தி கொள்ளவில்லை. மேலும், பால் உற்பத்தியாளர் சங்கத்தை நிர்வாகம் செய்து வரும் சங்கரநாராயணன் பல முறை தகவல் தெரிவித்தும் அவரும் கண்டுகொள்ளவில்லை, அவர்கள் 3 பேரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், தற்பொழுது சங்க உறுப்பினரான சக்கரவர்த்தி என்பவர் பாலில் தண்ணீர் கலப்படம் செய்த பாலை கண்டுபிடிக்கப்பட்டு பால்வளத் துணை பதிவாளர் ஜெயயாலிடம் ஒப்படைக்கப்பட்டது. சங்கத்தில் வேலை செய்து வரும் பணியாளர்கள் மூவரும் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வதற்கு சங்கத்தை நிர்வாகம் செய்துவரும் சங்கரநாராயணன் தான் முழு காரணம் என தெரியவந்தது.

துணை பதிவாளர் சிறுவாச்சூரில் இயங்கிவரும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வேலை செய்து வரும் நான்கு பேர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அவர்களுக்கு ரெக்கவரி போடுவதுடன், பணிநீக்கட் செய்ய வேண்டுமென அச்சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பால் கேன்களுடன் வந்து பெரம்பலூர் கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டனர். துணைப்பதிவாளர் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், கலெக்டராகிய தாங்கள் இப்பிரச்சனையில் தலையிடவேண்டும். மேலும்,

பணிநீக்கம் செய்யப்பட்ட நான்கு நபர்களுக்கும் உறுப்பினர்கள் சம்மதம் இல்லாமல் வாழ்வாதார ஓய்வூதியம் ரூ2 லட்சம் வழங்கப்பட்டது குறித்தும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

கூட்டுறவுத் துறையில் நடக்கும் கொள்ளைகளுக்கு இது சிறு உதாரணம்தான் இந்த சிறுவாச்சூர் சம்பவம். கூட்டுறவுத் துறையை வெளிப்படைத்தன்மையாக நடத்த வேண்டும், இல்லை என்றால் இதனை அரசு கலைக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் உண்மை கணக்கு எது பொய் கணக்கு எது என தெரிந்து கொள்ள (RTI) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வரவேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த ஆண்டுகளில் ஆவின் பால் சென்ற லாரிகளில் தண்ணீரை ஊற்றினார்கள். தற்போது கேன்களில் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!