Perambalur: Dispute between two parties over breeding of dogs; Police investigating!
பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் கிராமத்தில், நாய்கள் வளர்ப்பதற்கு தொடர்பாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு குறித்து பெரம்பலூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். அம்மாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமினாபீ (48). வீட்டில் 3 நாய்கள் வளர்த்து வருகிறார்.
நாய்களை வீட்டில் கட்டி வைக்காமல் வளர்ப்பதால் அருகில் உள்ள வீட்டினரையும், சாலையில் செல்வோர்களையும், துரத்துவதும் குறைப்பதுமாக இருந்துள்ளது.
அமினாபி பக்கத்து வீட்டில் வசிப்பவர் கலைமணி. இவரது வீட்டிற்கு கலைமணி மகள் கமலா கடந்த ஜன.4ந்தேதி வீட்டிற்கு வந்துவிட்டு மொபட்டில் தனது கணவருடன் திரும்பி செல்லும் போது அமினாபி-யின் நாய்கள் துரத்தியோடு, கமலாவின் சேலையை பிடித்து இழுத்தன. இதில், கமலாவும், அவரது கணவரும் கீழே விழுந்துள்ளனர்.
அமீனா பி-யிடம் கமலா குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக செஞ்சேரியில் உள்ள பெரம்பலூர் ஊரக காவல் நிலைய அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் இருதரப்பினரும் சமசரமாக சென்றனர்
ஆனால், மீண்டும் இன்று மோகன்ராஜ் அம்மாபாளையத்தில் துக்க நிகழ்ச்சிக்கு வந்த தனது உறவினர்கள் சுமார் 10 நபர்களை அழைத்து வந்து மீண்டும் பக்கத்து வீட்டுக்காரர் கலைமணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் ஊரக காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கலைமணி வீட்டில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்னர்.