Perambalur: Distribution of ration items to the homes of the elderly and the disabled!

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு முதியவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேசன்பொருட்களை வழங்கும் ‘தாயுமானவர்‘ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெரம்பலூர் வட்டத்தில் 5129 நபர்களும், ஆலத்தூர் வட்டத்தில் 4102 நபர்களும், குன்னம் வட்டத்தில் 5205 நபர்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 4666 நபர்களும் என மொத்தம் 19102 நபர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் நவம்பர் மாதத்திற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்களை 03.11.2025, 04.11.2025 மற்றும் 05.11.2025 ஆகிய தேதிகளில் ரேசன் வழங்கப்படவுள்ளது . எனவே, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!