Perambalur District All Courts, Micro People’s Court on the 12th: District Chief Justice Information
பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். சுபாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
உச்சநீதிமன்றம், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வரும் டிச.12அன்று பெரம்பலூர் மாவட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையிலுள்ள வழக்குகள் சம்மந்தமாக சமரசமாக பேசி முடிக்க தேசிய (மைக்ரோ) மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. அதில், நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து சிவில், ஜீவனாம்சம், மணவழக்கு, காசோலை மோசடி, சமரசமாக பேசி முடிக்கக்கூடிய குற்றவியல் வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல் சம்மந்தமான வழக்குகள் மற்றும் வாகன விபத்து சம்மந்தப்பட்ட வழக்குகளிலும் சமரச முறையில் தீர்வு காணலாம். ஆகவே இந்த வாய்ப்பினை வழக்காடிகள் தங்களுடைய வழக்குகளை முடிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.