Perambalur District By-Election: 1 Panchayat President, 4 Ward Member Posts – Collector Information!
பெரம்பலூர் ஒன்றியம், மேலப்புலியூர் ஊராட்சி தலைவர், ஆலத்தூர் ஒன்றியம் இரூர் கிராம ஊராட்சியின் 1வது வார்டு மற்றும் பிலிமிசை 4வது வார்டு, வேப்பந்தட்டை ஒன்றியம் வி.களத்தூர் 7வது வார்டு, வேப்பூர் ஒன்றியம் கீழப்புலியூர் 8வது வார்டு பதவிகளுக்கான தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் 17.06.2022 அன்று தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய / கிராம ஊராட்சி அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வாக்காளர் பட்டியல் 05.01.2022-ஆம் தேதி வெளியிடப்பட்ட சட்டமன்ற வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் சென்று விண்ணப்பித்து அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க வேண்டும். அதன் அடிப்படையில் கிராம ஊராட்சி வார்டு வாக்காளர் பட்டியலில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் சேர்க்கப்படும்.
இன்று தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 05.00 மணி வரை வேட்பு மனுக்கள் பெறுவதற்கான ஆரம்ப நாள் ஆகும். 27.06.2022 அன்று வேட்பு மனுக்கள் பெறுவதற்கான கடைசி நாள் ஆகும்.
28.06.2022 அன்று முற்பகல் 10.00 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 30.06.2022 அன்று பிற்பகல் 03.00 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
09.07.2022 அன்று காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 12.07.2022 அன்று காலை 08.00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கும். 14.07.2022 அன்றுடன் தேர்தல் நடைமுறைகள் முடிவுபெறும், என என கலெக்டர் வெங்கட பிரியாதெரிவித்துள்ளார்.