Perambalur: District Farmers’ Grievance Redressal Day meeting; Collector’s information!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், செப்டம்பர் மாதத்திற்கான வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.09.2025 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தேவைகள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!