Perambalur District SC – Tribal Welfare and students can apply to stay in hotels.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் 20 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும் 14 ஆதிதிராவிடர் மாணவியர் விடுதிகளும் 1 கல்லூரி மாணவர் விடுதியும் 3 கல்லூரி மாணவியர் விடுதிகளும் 1 பழங்குடியினர் நல மாணவியர் விடுதியும் 1 பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப்பள்ளி விடுதி என மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இவ்விடுதிகளில் தங்கி கல்விப் பயில விரும்பும் அனைத்து மாணவ – மாணவியர்களுக்கும் உணவு, உறைவிடமும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இலவசமாக 4 இணைச் சீருடைகளும், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர் – மாணவியர்களுக்கு சிறப்பு வழிக்காட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்விடுதிகளில் சேருவதற்கு மாணவர் – மாணவியர்களின் பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2,00,000- மிகாமல் இருக்க வேண்டும். இவ்விடுதிகளில் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர், மாணவியர்கள் விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்
மாணவர்களுக்கு தங்களது இருப்பிடத்திற்கும் மாணவர்களின் பள்ளிக்கும் இடைவெளி 5-கி.மீ க்கு மேல் இருக்க வேண்டும். இந்த விதி மாணவியர்களுக்கு பொருந்தாது.
எனவே, மேற்க்கண்ட விடுதிகளில் சேர்வதற்கு பள்ளி மாணவர் – மாணவியர்கள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் – காப்பாளினியிடமிருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று 15.06.2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் விடுதி காப்பாளர், காப்பாளினியிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவ – மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.