Perambalur DMK: Polling station agents meet; Leader M.K. Stalin should be made Chief Minister again; Ministers K.N. Nehru, S.S. Sivashankar speak!

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் BLA2, BDA மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் நடந்தது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் – திமுக மண்டல பொறுப்பாளருமான கே.என்.நேரு – போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு, இந்த மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் மு.க‌.ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் எனவும், குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் பேசினார்கள்.

இதில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் குன்னம் சி.ராஜேந்திரன், தொகுதி பார்வையாளர்கள் தங்க.சித்தார்த்தன், ஏ.கே.அருண், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், செ.அண்ணாதுரை, ராமச்சந்திரன், ஆர்.முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன்,
ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்நி, எம்.ராஜ்குமார், செ.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், அழகு.நீலமேகம், பேரூர் கழகச் செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர்,ஏ.எஸ்.ஜாகிர்உசேன்,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், டி.ஆர்.சிவசங்கர், ஆர்.அருண், மா.பிரபாகரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கவிஞர் .முத்தரசன், சு.தங்கராசு, ஆர்.வேணுகோபால், ஏ.கே.எம்.கரிகாலன், காடூர்.கவியரசு, தங்க.கமல், வெ.கார்மேகம், எ.ஜாகிர்உசேன், ஆர்.குமார், எம்.சுந்தர்ராஜ், க.ரமேஷ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுகத் தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெற்றி முழக்கமான “எனது வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ” எனும் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர்,குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுகின்ற வகையில் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று அனைத்து நிலை நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்கிறது எனவும், SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பட்டியலுக்கு வாக்குச்சாவடி அளவில் கழகத்தை தயார்படுத்த வேண்டும் என்று அனைத்து நிர்வாகிகளையும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது எனவும், ஒன்றிய, நகர பேரூர் கழகச் செயலாளர்கள் ஒரு நாளைக்கு ஒரு வாக்குச்சாவடி எனும் அடிப்படையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எளிய முறையில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும்,

தகுதியுள்ள எந்த வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது எனவும், தகுதியற்ற எந்த வாக்காளர் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும்,
01.11.2025, அன்று நடைபெறவுள்ள வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள், தகவல் தொழில்நுட்ப அணி வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் சன்.சம்பத் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!