Perambalur: DMK Woman volunteer arrested for defrauding 15 lakhs of getting government job! Social activists demand that action should be taken against the person who tried to get a job by giving a bribe!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 15 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய பெண்ணை க்ரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தை சேர்ந்த வினோத்குமாரின் மனைவி பொன்மனச்செல்வி. பேங் ஆப் இந்தியா வங்கியில் மேனஜராக வேலை பார்த்து வந்தார்.

அப்போது, அவருக்கு, பெரம்பலூர், கலைநகரைச் சேர்ந்த நாகராஜன் மனைவி முத்துலட்சுமி என்பவர் தனக்கு அரசியல் தலைவர்களை தெரியும் என்றும், அவர்களை வைத்து நிறைய பேருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாக ஆசை வார்த்தைகளை கூறி பொன்மனச்செல்வியிடம் அவரது உறவினருக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக கடந்த 2023 -ம் ஆண்டு ரூபாய் 15 லட்சம் பெற்றுக் கொண்டு பணத்தை தராமல் ஏமாற்றி வருவதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த க்ரைம் பிராஞ்ச் போலீசார் முத்துலட்சுமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

லஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் என்பதால், அரசியல்வாதிகளுக்கு கையூட்டாக பணம் கொடுத்து அடுத்தவர் வேலையை குறுக்கு வழியில் தட்டி பறிக்க நினைத்த வங்கி மேலாளர் பொன்மனச்செல்வி மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதன் மூலம், குறுக்கு வழியில் பணம் கொடுத்து அடுத்தவர் வேலையை தட்டி பறிப்பவர் இனி அஞ்சுவார்கள் என்றும் சமூக ஆர்வர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!