Perambalur: Dr. Karunakaran elected as the district president of the Tamil Nadu Progressive Writers and Artists Association

பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை, 3வது தளத்தில் உள்ள கவிஞர் நந்தலாலா அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாட்டு கூட்டம் நடைபெற்றது. சுரேஸ்பகுமார் தலைமை வகித்தார். மருத்துவர் கருணாகரன் வரவேற்றார். பதியம் இலக்கியச் சங்கமம் தமிழ்மாறன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,”வெறுப்பின் கொற்றம்| வீழ்க! அன்பே அறமென எழுக!!” என்ற தலைப்பில் பேசினார். இதில் தமுஎகச பெரம்பலூர் மாவட்ட தலைவராக மருத்துவர் கருணாகரன், செயலாளராக எட்வின், பொருளாளராக போஸ்கோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்வில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் காப்பியன், பகுத்தறிவாளர் கழகம் நடராசன், அரும்பாவூர் ஆசிரியர் தாஹீர்பாட்ஷா, ராஜசேகர், கவிஞர். அகவி, கவிஞர் செந்தில்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!