Perambalur: Draft guidelines released for public view to resolve discrepancies; Collector’s announcement!

Tamil Nadu Stamp (Constitution of Valuation Committee for Estimation, Publication and Revision of Market Value Guideline of Properties) Rules 2010 விதி 4(2)-ன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வழிகாட்டியில் உள்ள முரண்பாடுகளை களைந்திடும் பொருட்டு வரைவு வழிகாட்டி தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், அதனை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக்குழுவிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். இது குறித்து மேலும் விவரங்களுக்கு மதிப்பீட்டு துணைக்குழு, மாவட்டப்பதிவாளர் (நிருவாகம்). மாவட்டப்பதிவாளர் அலுவலகம், எண்.106H/1, வார்டு 11, வெங்கடேசபுரம்,கிருஷ்ணா தியேட்டர் பின்புறம், பெரம்பலூர் வட்டம் & மாவட்டம் – 621212.என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து பயன் பெறலாம் என கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.









kaalaimalar2@gmail.com |
9003770497