Perambalur: Employment camp at the ready-made garment manufacturing unit of Padalur Fine Fit Garments;

Model Photo : Crdeit to coatsdigital.com
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் நடத்தும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணிபுரிய ஆலத்தூர் வட்டம், பாடாலூர் ஊராட்சியில் உள்ள ஸ்பென் பிட் கார்மெண்ட்ஸ் அலகில், டெய்லர் , செக்கர், ஹெல்பர், ஐயனர், ஆகிய பணிகளுக்கு வேலையாட்கள் தேவைப்படுவதால் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக வேலைவாய்ப்பு முகாம் 30.01.2025 அன்று.பைன் பிட் கார்மெண்ட்ஸ் ஆயத்த ஆடை நிறுவனத்திலேயே காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் தையல் தொழில் தெரிந்த மற்றும் பயிற்சி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும், தையல் தொழில் தெரியாதவர்களுக்கு நிறுவனத்தின் மூலமாக சம்பளத்துடன் கூடிய பயிற்சிகள் சிறந்த முறையில் வழங்கப்படும், இலவச பேருந்து வசதி உண்டு, திறமைக்கேற்ற ஊதியம் வழங்கப்படும், காலை 8.45 முதல் 5.45 மணிவரை வேலை நேரமாகும், பணியில் சேர்ந்தவுடன் PF, ESI போனஸ் மற்றும் இதரச்சலுகைகள் வழங்கபடும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தையல் தொழில் தெரிந்த மற்றும் தெரியாத 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த 250-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தேவைப்படுகிறார்கள். ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்திற்கு இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9025027058, 98431 90666, 94440 94136 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.