Perambalur: Equality Pongal at Kunnam MLA’s office! Minister Sivashankar congratulates party members!
பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் உள்ள குன்னம் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடந்தது. தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டதுடன், பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு பொங்கல் வழங்கினார். பொதுமக்கள், கட்சியினர் அமைச்சருக்கும், அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் கட்சியினருக்கும் பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் துரைசாமி, ராஜ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அழகு.நீலமேகம், PSR @ பட்டுச்செல்வி ராஜேந்திரன் மற்றும் குன்னம் கவுன்சிலர் உமா சந்தோஷ்குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கு.க.அன்பழகன், உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர், “கலைஞர் கணினி பயிற்சி மையத்தை” திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி வரும் ஜன.19 அன்று, குன்னத்தில் திறந்து வைக்க உள்ளார். அதற்கான அழைப்பிதழ்களையும், மாணவர்கள் பயிற்சியில் சேருவதற்கான துண்டறிக்கையும் பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.