Perambalur: Equality Pongal Festival at the Collector’s Office: Collector Grace comes first in the Lemon Spoon Competition!
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் நடந்தது. ரங்கோலி கோலப்போட்டி, இசை நாற்காலி, கயிறு இழுத்தல், தண்ணீர் நிரப்புதல், உரி அடித்தல். ஊசி நூல் கோர்த்தல் போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் அரசு அலுவலர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இப்போட்டிகளில் ஒன்றான லெமன் ஸ்பூன் கொண்டு செல்லுதல் போட்டியில் அரசு அலுவலர்களுடன் கலெக்டர் கிரேஸ் கலந்து கொண்டு, முதலாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். பின்னர், போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பரிசுகளை கலெக்டர், எம்.எல்.ஏ பரிசுகளை வழங்கினர். காளை மாடுகள் பூட்டிய வண்டியில், கலெக்டர், எம்.எல்.ஏ கலெக்டர் அலுவலக வளாகத்தில் பயணம் செய்தனர். அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.