Perambalur: Equality Pongal festival on behalf of the police; SP Adarsh Pasera participated!
பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் குடும்பத்துடன், போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் பொங்கல் விழாவை சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடினர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. குழந்தைகளுக்கான பாட்டிலில் நீர் நிரப்புதல், சாக்கு பை ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், சைக்கிள் போட்டி, இசை நாற்காலி ஆகியவையும் பெரியவர்களுக்கான கபாடி மற்றும் கைப்பந்து போட்டிகள் ஆண்கள் பெண்கள் என இரு பிரிவினரும் கலந்து கொண்டனர்.
இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் போலீஸ் எஸ்.பி பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். AD. SP மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு பாலமுருகன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் DSP பிரபு மற்றும் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார்கள் கலந்துகொண்டனர்.