Perambalur: Examination for Integrated Technical Services; Collector inspects the centers!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வு மையமான தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை அறிவியல் கல்லூரியில் இன்று கலெக்டர் மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் ஆகிய தேர்வு மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வினை எழுத 250 பேர் விண்ணப்பித்த நிலையில், 168 பேர் இன்று தேர்வெழுதினர், 82 பேர் வரவில்லை. தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும், ஆன்லைன் மூலம் எழுதப்படும் தேர்வு என்பதால் தேர்வெழுதும் அறைகளில் போதிய இணைதள வசதி, கணினி உள்ளிட்ட வசதிகள் உள்ளதா என்பது குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.










kaalaimalar2@gmail.com |
9003770497