Perambalur: Executive committee meeting regarding Dravidian Pongal! Statement from District DMK In-charge V. Jagadeesan.

பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா.எம்.பி. வழிகாட்டுதல்படி, போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா‌.சி.சிவசங்கர் ஆலோசனைக்கிணங்க,

பெரம்பலூர் மாவட்ட கழக செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில், கே.என்.அருண்நேரு.எம்.பி.,

– சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், ஆகியோர் முன்னிலையில் , 06.01.2026, செவ்வாய்க்கிழமை

காலை 10.00. மணிக்கு, பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக க அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் ஏ.கே.அருண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதில் மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள்,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய,நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும், ஜனவரி -14,15- தேதிகளில் நடைபெறும் திராவிடப் பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம் குறித்தும்,

ஜனவரி-19, தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடைபெற உள்ள டெல்டா மகளிர் அணி மண்டல மாநாடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது, என பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!