Perambalur expose’ of rotten eggs given to children deserves praise : kamal twitter

பெரம்பலூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் முட்டை கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாகவும், அதனை கமல் ரசிகர்கள் வௌிக் கொண்டு வந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் மாணவர்களுக்கு அழுகிய சத்துணவு முட்டைகள் வழங்கியதை கமலஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்தினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடிகர் கமலஹாசன் தமிழ்நாட்டில் எங்கும் ஊழல் நிறைந்திருப்பதாக குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள் கமலஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதையடுத்து, கமலஹாசன் எப்போதும் நான் ஊழலுக்கு எதிராக இருப்பேன்.

ஊழல்களை அம்பலப்படுத்துவேன் என்று கூறினார். நடிகர் கமலஹாசனின் இந்த பேச்சுகள் அவர் அரசியலுக்கு வரப் போகிறார் என்று சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது.

ஊழலுக்கு எதிரான நடிகர் கமலஹாசனின் பேச்சைத்தொடர்ந்து, கமலஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்தினர் தங்களின் அரசியல் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி, ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களுக்கு அழுகிய சத்துணவு முட்டை வழங்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் பெரம்பலூர் மாவட்ட கமலஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்தினர் ஜூலை 24ம் தேதி பெரம்பலூரில் உள்ள அங்கன்வாடி மையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அங்கன்வாடி மையத்திலுள்ள 3 வயது 4 வயது குழந்தைகளுக்கு அழுகிய சத்துணவு முட்டை வழங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர், குழந்தைகளுக்கு அழுகிய சத்துணவு முட்டை வழங்கப்படுவதை தடுத்து நிறுத்திய கமலஹாசன் ரசிகர்கள், இந்த விஷயத்தை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

மேலும், பெரம்பலூர் ஒன்றியம், நகரம், வேப்பந்தட்டை ஒன்றியம், குன்னம் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மைய்யம் மற்றும் ஆரம்ப பள்ளிகளில் கமலஹாசன் ரசிகர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் அழுகிய சத்துணவு முட்டை வழங்கப்படுகிறது என்று கமலஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!