Perambalur: Famous rowdy missing; Police form 3 special teams and conduct intensive search and rescue operation!

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் நவீன் @ நவீன்குமார். இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் அவரை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்தும் அவர் எங்கு இருக்கிறார் என தெரியாததால், பெரம்பலூர் டவுன் போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து நவீனை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!