Perambalur: Farmer hands over rare star tortoise that strayed into his field to the forest department!

பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் அருகே உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து மகன் ரமேஷ்(38). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இன்று காலை ரமேஷ் வெங்காய வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அரிய வகை நட்சத்திர ஆமை Indian star tortoise ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டார். இது குறித்து பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனக்காப்பாளர் மணிகண்டன் அந்த நட்சத்திர ஆமையை மீட்டு காப்பு காட்டில் கொண்டு போய்விட்டார். வெளி நாடுகளில் பிரபலமாக உள்ள நட்சத்திர ஆமை பெரம்பலூர் மாவட்டத்தில் பல ஆண்டுளாக பச்சமலை உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அழிந்து வரும் இனமான இந்த நட்சத்திர ஆமை இனம் செல்லப்பிராணிகள் வளர்ப்பிற்காக வெளிநாட்டினர் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். இதற்கு அரசு தடை விதித்துள்ளது. நட்சத்திர ஆமையை வனத்துறையினரிடம் ஒப்படைத்த விவசாயி ரமேசை அப்பகுதிமக்கள் பாராட்டினர்.
விளம்பரம்:











kaalaimalar2@gmail.com |
9003770497