perambalur Farmers who want to apply to ooze

மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தக் குமார்விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளிலிருந்து வண்டல் மண் அல்லது சவுடு மண் ஆகியவற்றினை கட்டணமில்லாமல் வேளாண்மைப் பயன்பாட்டிற்காக எடுக்க விரும்பும் விவசாயிகள் புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநா; அவா;களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேளாண்மை நோக்கத்திற்காக நீர் நிலைகளிலிருந்து வண்டல் மண் அல்லது சவுடு மண் எடுக்க விரும்பும் விவசாயியின் வசிப்பிடம்ஃவேளாண்மை நிலம் வண்டல் மண் அல்லது சவுடு மண் வெட்டி எடுக்கும் நீர் நிலை உள்ள வருவாய் கிராமம் அல்லது அருகில் உள்ள வருவாய் கிராமமாக இருத்தல் வேண்டும். 30 கன மீட்டர;கள் அல்லது ஐந்து லாரி லோடு அல்லது 200 சதுர அடி அளவு வரை வண்டல் மண் அல்லது சவுடு மண் வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தில் விவசாயியின் நில உடமைக்கான சான்று, ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் நகல் (ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை) இணைக்கப்பட வேண்டும். மேலும் விண்ணப்பத்தில் வண்டல் மண் அல்லது சவுடு மண் எடுக்க பயன்படுத்தும் ஜே.சி.பி இயந்திரத்தின் பதிவு எண், மற்றும் வாகனங்களின் பதிவு எண்கள் குறிப்பிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!