Perambalur: Father drowns in pond in front of children! Tragedy due to drunkenness!!
பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் சிலோன் காலனியை சேர்ந்தவர் காசிராஜன் மகன் பாலச்சந்தர்(40). பெயிண்டர் வேலை செய்து வந்த இவருக்கு சாந்தி (36), என்ற மனைவியும், சக்தி (11) என்ற மகனும், மதுபாலா (9), என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டிலேயே தூங்கிக் கொண்டிருந்த பாலச்சந்தர் திடீரென எழுந்து அப்பகுதியில் உள்ள பச்சையம்மன் கோவில் குளத்தில் குளிப்பதற்காக தன் குழந்தைகளுடன் சென்றுள்ளார். குளத்தின் கரையில் குடித்துக் கொண்டிருந்த பாலச்சந்தர் மது போதை தலைக்கேறி நிலையில் திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த தகவலின் பெயரில் வேப்பூர் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று கோவில் குளத்தில் இருந்து பாலச்சந்திரனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மங்கள மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் கண்முன்னே தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தார் உள்ளிட்ட உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.