Perambalur: Father refused to divide property; four family members—son, daughter-in-law, grandson, and granddaughter—commit suicide.

பெரம்பலூர் அருகே தந்தை சொத்தை பிரித்து தராத பிரச்சனையால், ஒரே குடும்பத்தை சேர்ந்த மகன், மருமகள், பேரன், பேத்தி என 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் 4 பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலுார் மாவட்டம், குன்னம் வட்டம், கீழபெரம்பலுார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ஜெயராமன் (30), இவருக்கு மனைவி காவ்யா (23), இவர்களுக்கு ஜெயஸ்ரீ (6), ஜெயசீலன் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயராமன் முடக்குவாதம் நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 3 வருடங்களாக வீட்டிலிருந்து வருகிறார்.
கடந்த மாதம் 20ம் தேதி ஜெயராமன் தனது அப்பா செல்வராஜிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ஜெயராமனுக்கும், இவரது மனைவி காவ்யாவுக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த ஜெயராமன், மனைவி காவ்யா ஆகியோர் வயலுக்கு அடிக்கும் பூச்சிக் கொல்லி மருந்து குடித்துவிட்டு, தங்களது 2 குழந்தைகளுக்கும் கொடுத்தனர். இதில், 4 பேரும் வீட்டில் மயங்கி கிடந்தனர். இதையறிந்த, உறவினர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், காவ்யா செப் 22-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஜெயராமன் தஞ்சாவூர்அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் .அக்.1-ம் தேதி சிகிச்சையின் போது உயிரிழந்தார். குழந்தைகள் இருவரும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த இரு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். இதுகுறித்து, குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடந்தி வருகின்றனர். முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு பெற்ற தந்தையே சொத்தை பிரித்து தராதால் மகனின் குடும்பமே இறந்து அடுத்த தலைமுறை நிர்மூலமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.









