Perambalur: Teacher chased down and stabbed to death!
அரியலூர் மாவட்டம், பெரிய திருகோணம் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ் இவரது மகன் புகழேந்தி (50) இவர் அரியலூர் மாவட்டம் கல்லகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவியர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்
இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பெரியம்மாபாளையம் சாலையில் உள்ள தனது உறவினர் (சகலை) ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான கோழி பண்ணைக்கு அடிக்கடி வந்து செல்வாராம் அதேபோல் இன்றும் கோழிப்பண்ணைக்கு வந்துள்ளார். கோழி பண்ணையில் புகழேந்தி இடது கையில் வெட்டு காயத்துடன் இறந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் அரியலூரை சேர்ந்த சுந்தரம் மகன் மணிகண்டன் (35) குன்னம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் சிவசூரியா (30) மற்றும் அரியலூரை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் ஆகிய மூவரும் புகழேந்தியை இன்று மாலை கோழி பண்ணையில் துரத்தி கொண்டு சென்றதாக அதை பார்த்தவர்கள் போலீசில் தெரிவித்தனர்.
அதன் பேரில் குன்னம் போலீசார் மணிகண்டன், சிவசூரியா நவநீதகிருஷ்ணன் ஆகிய மூவரையும் தேடி தீவிரமாக வருகின்றனர். போலீசார் மூவரையும் பிடித்து விசாரணை நடத்தினால் கொலை நடந்ததற்கான காரணங்கள் தெரியவரும்.
ஓவிய ஆசிரியர் மர்மமான முறையில் குன்னத்தில் இறந்த கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்கும் பணியில் இரவு பகல் பாராமல் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது