Perambalur: Sanitation workers prevented the municipality office from opening for about three hours!

பெரம்பலூர் நகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களாக பணி செய்யும் தூய்மை பணியாளர்களின் EPF நிலுவைத் தொகை ரூ. 55 லட்சத்தை உடனடியாக வழங்க கோரியும் ஒப்பந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று காலை தூய்மை பணியாளர்கள், இந்திய தேசிய தூய்மை பணியாளர்கள் பேரவை சார்பில் பி.ஆர். ஈஸ்வரன் தலைமையில் இன்று காலை நகராட்சி அலுவலகத்தை திறக்க விடாமல் நுழைவாயில் முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு, தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது வேலைக்கு வந்த நகராட்சி பணியாளர்கள் உள்ளே செல்ல முடியாமல் வெளியே காத்து கொண்டிருந்தனர். காத்திருப்பு போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் காலை 9 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணி வரை நகராட்சி அலுவலக கதவு திறக்க விடாமல் கதவு முன்னால் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து தூய்மை பணியாளர்களுடனும், நகராட்சி ஆணையருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

EPF பெற்றுள்ள நிறுவனம் பெரம்பலூர் நகராட்சிக்கு ரூ. 55 லட்சத்தை ரூ. 25 லட்சத்திற்கு ஒரு காசோலையும், ரூ. 30 லட்சத்திற்கு மற்றொரு காசோலையை ஒப்பந்த நிறுவனம் வழங்கி உள்ளதாகவும், அதனை நகராட்சி கமிசனர் அதனை கலெக்சனுக்கு அனுப்பாமல் கிடப்பில் வைத்துள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேசும், சி.ஐ,டி.யூ அகஸ்டினும் தெரிவித்ததுடன், பல்வேறு கட்ட போராட்டங்களை கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தி உள்ளது. மேலும், அவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காமல் நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்துவதை கண்டிப்பதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!