Perambalur: Special awareness camp for setting up solar power systems!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் 12.10.26 திங்கட்கிழமை அன்று நடக்கும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தை முன்னிட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சூரிய மின்சக்தி குறித்த சிறப்பு விழிப்புணர்வு அரங்கு அமைக்கப்பட உள்ளது. இதில், பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் சூரிய மின்தகடுகள் அமைப்பது தொடர்பாக ஒரே இடத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய மின்தகடுகள் வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் வங்கிக் கடன் வசதி குறித்த வங்கி அலுவலர்கள் அரசு மானியம் மற்றும் அதனைப் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்த விளக்கங்கள் TNPDCL அலுவலர்களின் வழிகாட்டுதல், விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த தகவல்கள் ஆகியவை தொடர்பாக பொதுமக்களுக்கு நேரடியாக விளக்கம் அளிக்கப்படும். சூரிய மின்சக்தி அமைக்க விரும்பும் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, தேவையான ஆவணங்களுடன் விழிப்புணர்வு அரங்கிற்கு வருகை தந்து, மானியம், வங்கிக் கடன் மற்றும் மின்வாரிய நடைமுறைகள் குறித்த முழுமையான தகவல்களைப் பெற்று பயன்பெறுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.









