Perambalur: Female farmer dies of electrocution while spraying pesticides on crops!

பெரம்பலூர் அருகே உள்ள நெடுவாசல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கேஸ்வரன் மனைவி ரேவதி (35). விவசாயி. இவர்கள் பயிர் செய்து வரும் வயலில் இன்று காலை சுமார் 11.30 அணி அளவில் சோளப்பயிருக்கு பூச்சி மருந்தை அவரது தாயார் மலர்க்கொடியுடன் தெளித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஏற்கனவே அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் இடது காலால் மிதித்ததில், சம்பவ இடத்திலேயே மின்சாரம் ரேவதி துடிதுடித்து பெற்ற தாய் கண்முண்ணே பரிதாபமாக உயிரழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், பலியான பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மின்விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வயலுக்கு பூச்சி மருந்து தெளித்த பெண் விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.










kaalaimalar2@gmail.com |
9003770497