Perambalur: Flight booking & cabin crew training for youth through TAHDCO; Collector informs!

பெரம்பலூர்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை (Airline Reservation Executive) மற்றும் கேபின் குழு பணியாளர் (Airline Cabin Crew Course) பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களாகவும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இப்பயிற்சிக்கான கால அளவு 3 மாதங்கள் ஆகும்.

இப்பயிற்சியில் விமான டிக்கெட் முன் பதிவு முறை, வாடிக்கையாளர் சேவை, தொடர்புத்திறன், ஆளுமை மேம்பாடு, விமான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கேபின் குழு பணிகள் குறித்து தொழில் முறை பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி திருப்பூர் மாவட்டத்தில் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை முழுமையாக முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.

இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், திருப்பூரில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும், எனவே, இந்த வாய்ப்பினை ஆர்வமுடையோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் ந. மிருணாளினி தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!