Perambalur: You can apply for B.Sc- Hospitality & Hotel Administration through TAHDCO; Collector N. Mrinalini informs!

தாட்கோ சார்பாக 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு தேசிய தேர்வு முகமை சார்பில் தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்சில் இணை நுழைவுத்தேர்வு மூலமாக B.Sc (Hospitality & Hotel Administration) ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் 3 வருட முழு நேர பட்டப்படிப்பில் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது,.

சென்னை தரமணியிலுள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition என்ற நிறுவனமானது ISO 9001 2015 தரச்சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமையப்பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம், மேலும் இந்நிறுவனம் சர்வதேச அமெரிக்கன் கவுன்சில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. Hotel Management Institute Survey 2022- ன்படி உலகளாவிய மனித வளமேம்பாட்டு மையத்தில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது.CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தரவரிசையில் பதிமூன்றாவது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது.

மேற்கண்ட நிறுவனத்தில் பயில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராகவும், 12ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றுயிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், தேசிய தேர்வு முகமை சார்பில் தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்சில் இணைநுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 25.03.2026 இத்தேர்வானது 25.04.2026 அன்று இணையதளம் வழியாக நடைபெறும். இத்தேர்வினை பற்றிய மேலும் விவரங்கள் மற்றும் பதிவு செய்ய http://exams.nta.nic.in/nchm-jee/ என்ற இணையதளத்தினை தொடர்புகொள்ளலாம்.

இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். மேலும் இப்படிப்பினை தாட்கோ மூலமாக பயில www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். இப்படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தங்களது திறமையின் அடிப்படையில் நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள் விமானத் துறை, கப்பல் துறை மற்றும் சேவை துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படும்.

ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம், எனவே இந்த வாய்ப்பினை ஆர்வமுடையோர் பயன்படுத்திக்கொள்ளலாம் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!