Perambalur: Foundation stone laying ceremony for the Rs. 18.10 crore Kolakanatam Government College building; Chief Minister M.K. Stalin inaugurated it! Minister Sivashankar laid the foundation stone!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக, ரூ.18.10 கோடி மதிப்பீட்டில் கொளக்காநத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடங்களை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இந்நிகழ்ச்சியை நேரலையில் பார்வையிட்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொளக்காநத்தம் பகுதியில் உள்ள மாணவ, மாணவியர்கள் மேல்நிலைக் கல்வி முடித்துவிட்டு கல்லூரி பயில திருச்சி, பெரம்பலூர், அரியலூர் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் சூழலை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் கொளக்காநத்தத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அறிவித்து தொடங்கி வைத்தார்.
கொளக்காநத்தம் அரசு கலை அறிவியல் கல்லூரி தற்காலிகமாக கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்ட அன்றே, சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ரூ.1 கோடி வழங்கி, கல்லூரிக்கான கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
தற்போது, கல்லூரிக்கான அனைத்து கட்டடங்களையும் முழுவதுமாக கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.18.10 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி, இன்று கல்லூரி கட்டடம் கட்டும் பணிகளுக்கு காணொளிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். தரைத்தளத்தில் இரண்டு வகுப்பறை, அலுவலக அறை, பதிவேடு அறை, முதல்வர் அறை, துறைத்தலைவர்கள் அறை, வேதியியல் ஆய்வகம், நூலகம், தேர்வுக்குழு அறை மற்றும் கழிவறைகளும், முதல் தளத்தில் வகுப்பறைகள், ஆய்வகங்களும், இரண்டாம் தளத்தில் , வகுப்பறைகள், கணினி ஆய்வகம், கருத்தரங்கு கூடம் மற்றும் கழிவறைகளும் கட்டப்படவுள்ளன. முன்னாள் ஊராட்சி யூனியன் சேர்மன் என்.கிருஷ்ணமூர்த்தி, குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, கல்லூரி முதல்வர் கண்ணதாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி, வேப்பூர் ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன், முன்னாள் கொளக்காநத்தம் ஊராட்சித் தலைவர் ராகவன், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கூடலூர் வ.சுப்பிரமணியன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497