Perambalur: The work to rescue drivers trapped in head-on collision trucks is in full swing!

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து மக்காச்சோளம் ஏற்றிய லாரி ஒன்றி துறையூர் வழியாக செல்ல பெரம்பலூர் – துறையூர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் இருந்து கற்களை ஏற்றி வந்த லாரியும் அடைக்கம்பட்டி அருகே வந்த போது இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்திற்கு உள்ளானது. இதில், லாரி டிரைவர்கள் இருவரும் இடிபாடுகளில் உயிருடன் சிக்கி கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் ரூரல் போலீசார் மற்றும் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரிகளின் இடிபாடுகளில் சிக்கி கொண்ட டிரைவர்களான முத்துசாமி மற்றும் நரசிம்மன் இருவர்களையும் உயிருடன் பாதுகாப்பாக மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.










kaalaimalar2@gmail.com |
9003770497