Perambalur: Food Safety Department officials inspected shops and imposed fines on those violating regulations.

பெரம்பலூர் நகரில் உள்ள கடைகளில் மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறை, பெரம்பலூர் நகராட்சி பணியாளர்கள் இணைந்து 52 கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது விதிமுறைகள் மீறி சாப்பிடுவோர்களுக்கு உடல் நலனுக்கு தீங்கிழைக்கும் வகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் – 8 கிலோ, காலாவதியான உணவுப்பொருள் 2 கிலோ, முறையான லேபிள் இல்லாத உணவுப்பொருட்கள் 2 கிலோ, கலப்பட டீத்தூள் 1.5 கிலோ, பிளாஸ்டிக் பைகளில் சூடாக பார்சல் செய்த சப்ளைக்கு தயராக இருந்த சாம்பார், ரசம், குழம்பு 5 லிட்டர் போன்றவற்றை பறிமுதல் செய்ததுடன் ரூ.26,000 அபராதம் விதித்தனர். மேலும், சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்ட 16 ஹோட்டல்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துகள் விற்பனை செய்தால் பொதுமக்கள் நலன் கருதி 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு குறுஞ்செய்தியோ அல்லது வாயிஸ் நோட் செய்யலாம் எனவும், மேலும் புகார் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட நியமனஅலுவலர் சுகந்தன் தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கதிரவன், அழகுவேல், புவனா, நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் சென்றிருந்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!