Perambalur: Swearing-in ceremony of student ministers at Alambadi Government School!

பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் மாணவ அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா பள்ளித் தலைமை ஆசிரியர் மாயக் கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 குழுவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள், கல்வி அமைச்சராக கார்த்திக், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சராக பிரிதிகா, சுகாதாரம் மற்றும் தூய்மை அமைச்சராக சாதனாஶ்ரீ, தகவல் மற்றும் தொடர்பு அமைச்சராக நவீன்ராஜ், மாணவர் நலன் மற்றும் பாதுகாப்பு அமைச்சராக ஹரிகரன் ஆகியோர் பதவி ஏற்றனர். தொப்பி, பெயர் பதாகை , பேட்ஜ் அணிவிக்கப்பட்டது. உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்முற்றம் அணியின் பொறுப்பாசிரியர்கள் செல்வராணி (குறிஞ்சி) பிரகாஷ் (முல்லை) பாலகணேஷ் (மருதம்) விஜயலெட்சுமி (நெய்தல்) ராமதாஸ் (பாலை) இவர்களும் பொறுப்பேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் அதியமான் அலுவலகப் பணியாளர்கள் சாந்தி மெஹருனிஷா, பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி விளக்கப் பட்டது. முன்னதாக ஆசிரியர் விஜயலெட்சுமி வரவேற்றார். ஆசிரியர் ராமதாஸ் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!