Perambalur: VCK meeting passes resolution to prioritize local youth for employment at the Udumbiyam private sugar mill.

வேப்பந்தட்டை விசிக ஒருங்கிணைந்த ஒன்றிய செயற்குழு கூட்டம் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் தலைமையில் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் கவியரசன் வரவேற்றார்.

பெரம்பலூர் விசிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட பொருளாளர் பிச்சைப்பிள்ளை, மாவட்ட செய்தித் தொடர்பாளர் அழகுமுத்து, மாவட்ட துணை அமைப்பாளர்கள் வெற்றியழகன், இடி முழக்கம், தங்க.சண்முகசுந்தரம், அய்யாக்கண்ணு, சங்கீதா, கேட் மணி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலு, காட்டு ராஜா, ஸ்டாலின் லால், ம.வி.இ மாவட்ட செயலாளர் ரேணுகா வேல்முருகன், இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை மாவட்ட செயலாளர் கரு.அய்யம்பெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், ஆகஸ்டு 17 அன்று தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாளில் நடைபெறும் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு வேப்பந்தட்டை ஒருங்கிணைந்த மேற்கு ஒன்றியத்தின் சார்பில் சுமார் 50_க்கும் மேற்பட்ட வாகனங்களில் கலந்து கொள்வது, வேப்பந்தட்டையில் காவல் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவும், பெரம்பலூர் முதல் ஆத்தூர் வரை உள்ள சாலையை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையாளப்பட்டி _ சின்னமுட்லு நீர்த்தேக்கம் அமைத்து அப்பகுதி விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், விசுவக்குடி நீர்த்தேக்கத்தை தூர்வாரியும், ஆழபடுத்தியும் சுற்றுலா பயணிகளின் பொழுது போக்கிற்காக பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணாபுரம் வட்டார தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் மேலும் கிருஷ்ணாபுரம் வட்டாரா தலைமை மருத்துவமனையில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும்.

வேப்பந்தட்டையில் நீதிமன்றம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்தும் நீதிமன்றம் கட்டாமல் கிடப்பில் உள்ளது, எனவே நீதிமன்றம் கட்டுவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பூலாம்பாடி புது தெருவில் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டவும், பயணியர் நிழற்குடை அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடும்பியம் தனியார் சர்க்கரை ஆலையில் உள்ளூர் கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!