Perambalur: The 269th Guru Puja of Veeran Alagumuthu Kone was observed on behalf of the District Ayar Makkal Peravai; Founder-President N. Muthaiah and MLA Sivakumar participated and paid their respects.

பெரம்பலூர் அம்மன் பேங்கர் வளாகத்தில் மாமன்னனும், முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரருமான, மாவீரன் அழகுமுத்து கோனின் 269 குருபூஜை விழா பெரம்பலூர் மாவட்ட ஆயர் மக்கள் பேரவை மற்றும் மாவட்ட நிர்வாக குழு சார்பில் ஏற்பாடு செய்து அலங்கரிக்கப்பட்டிருந்த வீரன் அழகுமுத்து கோன் உருவ படத்திற்கு நிறுவனரும், தலைவருமான ந. முத்தையா யாதவ் தலைமையில் மலர்மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் பேரவை அமைப்பினர் மரியாதை செலுத்தினர். பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் கி.சிவகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீரன் அழகுமுத்து கோன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ரா.திருவள்ளுவர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தார். சி.சித்ரா இறைவணக்கம் பாடலை பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக, வேப்பூர் ஒன்றியத்தை பிரபாகரன் வரவேற்றார்.
கல்யாணி மெஸ் வக்கீல் சுந்தரம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம், முத்துசாமி, ஜெயராமன், ராஜ்மோகன், கோவிந்தசாமி, வெங்கடேஷ், சுரேஷ், மல்லிகா அர்ச்சுனன், சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலசேகர், பாஸ்கர், ஜெயச்சந்திரன், விஜயராஜேந்திரன், மருதமுத்து, கோவிந்தராஜ், ஆர்.சங்கீதா, ராமர், செல்வராஜ், அன்பரசி, நடேசன், கோவிந்தராஜ், அம்மு, ரமேஷ், இளவரசன், சுமதிகுமார், ஜெயராமன், ராஜேஷ், பச்சைம்மாள், தமிழரசன், செல்வகுமார், பவானி, முத்தையா, பி.வெங்கடேஷ், மகேஸ்வரி, ஆனந்தன், ராஜ்குமார், அருந்ததி, பச்சமுத்து, வளர்மதி, ஜெயந்தி, சித்ரா, மணிகண்டன், ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கி வீரன் அழகுமுத்து கோன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மக்கள் நீதி மய்யம் மாவட்டத் தலைவர் முத்துக்குமார் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆயர்குல பேரவையை சேர்ந்த செயல்வீரர்கள், பேரவை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். குரும்பலூர் முத்துக்குமார் நன்றி கூறினார்.










kaalaimalar2@gmail.com |
9003770497