Perambalur: Sterilization and anti-rabies vaccination for stray dogs; Collector’s announcement!

பெரம்பலூர் அருகே உள்ள கீழப்புலியூர் கால்நடை மருந்தகத்தில் 10.02.2026 முதல் செயல்பட்டு வருகிறது. சமூக நாய்களுக்கான இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மையத்திலும், பெரம்பலூர் கால்நடை மருத்துவமனையிலும், வாரந்தோறும் பெரம்பலூர் நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிகள் அமைப்புடன் பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுநாள்வரை தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், வி.களத்தூர், பூலாம்பாடி, வயலப்பாடி, கிழுமத்தூர், அடைக்கம்பட்டி ஆகிய கிராமங்களில் 301 சமூக (தெரு) நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வாரா வாரம் சமூக (தெரு) நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களும் தாமாக முன்வந்து தங்களது செல்ல பிராணிகளுக்கும் வெறிநோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497