Perambalur: Food Safety Department officials seized expired products and imposed fines at schools and colleges.

பெரம்பலூர் நகராட்சியில் வெங்கடேசபுரம் ரோடு, எளம்பலூர் ரோடு, துறையூர் ரோடு, வடக்கு மாதவி ரோடு மற்றும் பெரம்பலூர் நகராட்சி பின்புறம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் நியமனஅலுவலர் டாக்டர் எஸ்.சுகந்தன் தலைமையில் ஆய்வு செய்தனர்.

அப்போது, காலாவதி தேதி, உற்பத்தி தேதி குறிப்பிடப்படாத மூலப் பொருட்கள் கொண்டு ஐஷ்க்ரீம், 12 லிட்டர் 100 பண்டல் கொண்ட மற்றொரு ஐஸ்க்ரீம் பாக்கெட், சிரப் மற்றும் 7 லிட்டர் சர்பத், 4 கிலோ காலாவதியான பொருட்கள், பொருள் விபரச் சீட்டு இல்லாத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு முறையாக அழித்தனர்.

அபராத தொகை மொத்தம் ரூ.12000 விதிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், பிரிவு 55 ஆய்வறிக்கை வழங்கப்பட்டு, உணவு மாதிரி எடுத்து உணவு பகுப் பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டது. மேலும், பள்ளி வளாக கேண்டீன்கள் மற்றும் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவைகளில் ஆய்வு செய்யப்பட்டு, பிரிவு 55 ஆய்வறிக்கை வழங்கப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துகள் விற்பனை செய்தால் பொதுமக்கள் நலன் கருதி 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு குறுஞ்செய்தியோ அல்லது வாயிஸ் நோட் செய்யலாம் எனவும், மேலும் புகார் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்துள்ளனர். உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கதிரவன், புவனா மற்றும் பணியாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!